சூப்பர் ஸ்டார் இயக்குனருடன் அஜித் திடீர் சந்திப்பு

0
881

தல அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ திரைப்படம் ஆறு வாரங்களை கடந்தும் இன்னும் தமிழகத்தில் உள்ள பல திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டு வருகிறது. இந்த நிலையில் பிங்க் தமிழ் ரீமேக் படமான ‘த்ல 59’ படத்தின் படப்பிடிப்பில் அஜித் சமீபத்தில் கலந்து கொண்டார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

ajith

இந்த நிலையில் ‘தல 59’ படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் பகுதி அருகிலேயே மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் தேசிய விருது பெற்ற இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கி வரும் ‘மரக்கார்’ என்ற படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அஜித் மற்றும் பிரியதர்ஷன் ஆகிய இருவரும் நேற்று சந்தித்து பேசிய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளது. இந்த சந்திப்பில் இருவரும் சில நிமிடங்கள் மனம் விட்டு சினிமா உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியதாக தெரிகிறது.