தல 59 பிங்க் ரி-மேக் தான், ஆனால்? – மரண மாஸான அப்டேட் . !

0
1940

தல 59 படம் பிங்க் படத்தின் ரி-மேக் தான். ஆனால் படம் முழுவதும் பிங்க் படத்தை போல் இருக்காது என்ற தகவல் கிடைத்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்துள்ள விஸ்வாசம் படத்தை தொடர்ந்து தீரன் பட இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

போனி கபூர் தயாரிக்க உள்ள இந்த படம் பாலிவுட்டில் அமிதாப் பச்சன், டாப்ஸி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருந்த பிங்க் படத்தின் ரி-மேக்காக உருவாக உள்ளது.

இதனை சமீபத்தில் பாலிவுட்டில் இப்படத்தை இயக்கி இருந்த இயக்குனர் உறுதி செய்திருந்தார்.

பிங்க் படத்தின் ரி-மேக் என்றால் நாயகிக்கு தான் முக்கியத்துவம் இருக்கும். அஜித்திற்கு மாஸ் இருக்காது என ரசிகர்கள் அதிர்ச்சியடைந்திருந்தனர்.

ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவல் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆம் அஜித்தின் அடுத்த படம் பிங்க் ரி-மேக் தான் என்றாலும் வழக்கம் போல அஜித்திற்கு இந்த படத்திலும் மாஸ் இருப்பது போல தான் படம் உருவாக உள்ளதாம்.

அதாவது பிங்க் படத்தின் கரு மட்டும் தான் தல 59 படத்தில் இருக்கும். மற்றபடி அஜித்திற்கு மாஸ், கிளாஸ் என எதுவுமே சற்றும் குறையாது.

படம் மிரட்டலாக தமிழ் சினிமா பாணியில் தான் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்புறம் என்ன ரசிகர்களே கொண்டாட்டத்துக்கு தயார் தானே?